• Apr 16 2024

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் விக்ரம்..! ஷாக்கான ரசிகர்கள்! என்னாச்சுங்க?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மற்றும் ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கே.ஜி.எஃப்பில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் விக்ரம் ட்விட்டர் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தங்கலான் படத்தின் கெட்டப்பில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

 இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், அத்துடன் இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement