கொரோனா நிவாரன நிதியாக பெருந்தொகைப்பணத்தை வழங்கிய நடிகர் விக்ரம்- எவ்வளவு தொகை தெரியுமா?

211

இந்தியாவில் கொரோனாத் தொற்றின் பரவலால் ஒவ்வொருநாளும் பலர் இறப்புக்குளளாகி வருவது அனைத்துத் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முழு ஊரடங்குச் சட்டத்தையும் பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் இத் தொற்றின் தடுப்புப் பணிக்காக பலரும் நிவாரண நிதி வழங்கலாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் சூர்யா – கார்த்தி குடும்பத்தினர், முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நிதி உதவி அளித்தனர்.

மேலும் நடிகர் அஜித் வங்கி பணபரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்கினார்.இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார். இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் நடிகர் விக்ரம் தற்போது அவரின் 60வது படத்தில் தனது மகன் உடன் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்தவாரம் தனது மகன் துருவ் உடன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: