• Apr 20 2024

'தங்கலான்' ஷூட்டிங்கில் மாளவிகா மோகனனை போட்டோ எடுத்த நடிகர் விக்ரம்!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அதில் தங்கலான் ஷூட்டிங்கில் மாளவிகா மோகனனை சீயான் விக்ரம் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "பாம்புகள், ஏணிகள், நிழல்கள். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் உங்களுடன்  சியான் விக்ரம் போன்ற தனித்துவமான போட்டோகிராபர் இருக்கும் போது" என தலைப்பிட்டு புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement