• May 29 2023

வெங்கட் பிரபுவிற்கு நடிகர் விஜய் போட்ட கண்டிஷன்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி 68 படத்திற்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுள்ள நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.

இதில் விஜய், தனக்கு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

எனினும் அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கதை கூறியுள்ளாராம்.

இயக்குநர் கூறிய ஒரு வரி விஜய்க்கு பிடித்து போனதால் கால்ஷீட் கொடுக்க முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் விஜய், இயக்குனருக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதாவது, இப்படத்தை குறுகிய காலகட்டத்திற்குள், அதாவது 40 நாட்களுக்குள் படமாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் விஜய். இது வெங்கட் பிரபுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அத்தோடு  விஜய், படத்திற்கு ஓகே சொன்னது மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.


Advertisement

Advertisement

Advertisement