• Mar 23 2023

VJ அர்ச்சனா மகள் ஸாராக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நடிகர் விஜய் ...! என்ன தெரியுமா?

Jo / 6 days ago

Advertisement

Listen News!

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாகினார்கள்.

தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் .

மேலும், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.இவரும் அறந்தாங்கி நிஷாவும் பாசப்போராட்டம் என்று டிராமா போட்டதால் பலரின் வெறுப்புக்கு உள்ளாக்கினார்கள். 

இந்நிலையில் அர்ச்சனா தன்னுடைய அம்மானுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் அதோடு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 லட்சத்திற்கு மேலானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் தான் ஸாரா பற்றிய வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் ஸாராவுக்கு விஜய் சிலையை ஒருவர் பரிசாக தந்துள்ளது. அதனை பார்த்த ஸாரா யார் இதை அனுப்பியது என்று ஆனந்தத்தில் கதறி அழுகிறார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement