முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகர் வடிவேலு- இவர் வெற்றி நாயகனாச்சே

244

தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்து வரும் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றமையும் தெரிந்ததே. மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் தேசிய விருது பெற்று வருகின்றமையும் முக்கியமாகும்.

அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு .இவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் அத்தோடு பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பதும் முக்கியமாகும்.ஆனால் தற்பொழுது படவாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றார்.

அத்தோடு நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின், எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் வடிவேலு, தற்போது மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் வடிவேலு இதுவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைந்து ஒரு முறை கூட நடிக்கவில்லையாம்.ஆனால், படிக்காதவன் படத்தில், விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் வடிவேலு தான் சில காட்சிகள் நடித்திருந்தார். ஆனால், திடீரென அப்படத்தில் இருந்து வடிவேலு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.