• Dec 07 2022

நடிகர் சூரியின் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - குவிந்து வரும் பாராட்டுக்கள்

Listen News!
stella / 1 week ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி.இவர் வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகின்றார்.

அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வேலன், டான், விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இந்த நிலையில், நடிகர் சூரி ரசிகர் மன்றத்தினர் செய்த விஷயம் ஒன்று, தற்போது பலரையும் நெகிழ வைத்து வருகிறது.


அதாவது மதுரை தெருக்களில் குப்பைகளை அள்ளி யாசகம் செய்து வந்த ஒரு முதியவரை அழைத்து சென்ற சூரி ரசிகர்கள், அவருக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி உள்ளனர்.அது மட்டுமில்லாமல், புதிய ஆடைகள் வாங்கி அவருக்கு அணிவித்தனர்.


மேலும் சூரி ரசிகர் மன்றத்தினர், அந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்ததாகவும் தெரிகிறது. முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் அந்த யாசகம் செய்து வந்த நபரை மாற்றியுள்ள விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சூரி ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.