• Apr 20 2024

முதல் முறையாக பிரபல மலையாள நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் சூரி- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் கவனக்கத் தக்க காமெடி நடிகராக மாறியவர் தான் நடிகர் சூரி.இவர் இதனைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார்.


அந்த வகையில் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


விடுதலை  படம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் நடிகர் சூரி, கூழாங்கல் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடிக்க உள்ளார். கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கபேலா, காப்பா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் அன்னா பென் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement