• Mar 29 2023

நடிகர் சூரி எப்பவுமே காமெடியன் தான்... இணையத்தில் பரப்பிய ரசிகன்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தி இருப்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விடயம்தான். இந்த படம் பெரும் வகையில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்கள்.


முன்பே சூரிக்கு ரசிகர் கூட்டம் பெருகி வரும் நேரத்தில் இந்த படத்தின் பின்னர் ரசிகர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு, நம் வாழ்வில் என்றென்றும் சந்தோசம் பொங்கி வரும் என்றவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.


இந்த பதிவோடு தனது புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு சூரியின் ரசிகர்கள் நல்ல விதமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அந்த வகையில், சூரி ஒரு காமெடியன் ஆனால் இப்போது சூரி ஒரு ஹீரோ, இரண்டு கதாபாத்திரங்களும் இவருக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இரண்டு மாதிரியிலும் இவர் செம்மையாக கலக்கி இருக்கிறார். ஆனால் எங்களுக்கு காமெடி சூரியை தான் பிடித்திருக்கிறது.


பரோட்டா சூரி என்னும் காமெடி சூரி எங்கள் மனதில் அமர்ந்து விட்டார். அவரை வேறு வேடத்தில் பார்க்க முடியவில்லை இவர் எப்போதுமே காமெடி சூரி தான் என்று தங்களது கருத்தை பதிவிட்டு இருந்தனர். சூரி திரும்பவும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பாரா? இல்லை இப்படியே ஹீரோவாக இருப்பாரா? என்று தெரியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement