நடிகர் சூரி வீட்டுத் திருமண வைபவத்தில் தங்க நகைகளைத் திருடியவர் கைது

191

தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர் என்பது தெரிந்ததே. அத்தோடு தற்பொழுதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

மேலும் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் இத்திருமணத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த வகையில் இந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தற்போது காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.