• Apr 25 2024

ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி..காரணம் என்ன தெரியுமா? குவியும் பாராட்டுக்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார் சூரி. இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து ‘கொட்டு காளி’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.அதே போல் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூரியின் காமெடிக்கு இருக்கும் ரசிகர்களை விட..ஹீரோவாக கொண்டாடவும் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. 

இந்நிலையில், சூரி..மதுரையில் உள்ள தன்னுடைய ரசிகரின் தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை என்பதை அறிந்து, அவரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்த, வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.அத்துடன் இந்த வீடியோவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement