நடிகர் சிவசங்கரைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர்

303

திரைப்படத் துறையில் நீண்ட காலமாக சிறந்த நடன மாஸ்டராக வலம் வருபவர் சிவசங்கர்.மேலும் பல நடிகைகளுக்கு நடன பயிற்சிகளை அளித்து புகழ் பெற்று விளங்கிய இவர் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். இவர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கடந்த நான்கு நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிவசங்கரின் நுரையீரலில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அவரது அவரது மருத்துவத்துக்கான போதிய பணம் இல்லாமல் திண்டாடி வருவதாக அவரது மகன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து இவரது மனைவி மற்றும் , மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனாவால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மாஸ்டரின் உடல் நலம் பெற வேண்டும் என்றும், அவரது மனைவி மற்றும் மகனும் விரைந்து குணமடைய வேண்டும் என, திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதே போல் இவரது சிகிச்சைக்கு பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.