• Apr 20 2024

திடீரென ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்திற்கு விசிட்டடித்த நடிகர் சிவகார்த்திகேயன்- இது தான் கரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் பல கட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. இதனை அடுத்து தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

அண்மையில் தான் இப்படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் ஆரம்பமாகியது.இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டது. 


‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போ இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.


இது தவிர நேற்றைய தினம் இந்தப்படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் 'ஜெயிலர்’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் சிவகார்த்திகேயன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement