• Apr 20 2024

தனது மனைவியுடன் நிற்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்துக்குள் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக டான் என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருப்பதோடு ப்ரியங்கா மோகன் எஸ்.ஜே சூர்யா ஷிவாங்கி ஆகியோரும் இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அத்தோடு டான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் குவித்து வருகிறது. முதல் வார முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 2.82 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளது.

வரும் நாட்களில் கண்டிப்பாக பட வசூல் உயரும் என்கின்றனர்.டான் பட வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்த அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/_xAgZgxOL6Y

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement