அருண்ராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்.

165

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனாத் தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அத்தோடு இந்தத் தொற்றால் பொதுமக்கள் திரையுலகினர் எனப் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது அனைத்துலக திரையுலகினரையும் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது.

அந்தவகையில் திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.மேலும் இன்று காலை பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் கடும் சோகத்தில் தள்ளியுள்ளது.

மேலும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அருண்ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் தனது மனைவிக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்தத் செய்தி ஒவ்வொருவர் மனதையும் காயப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், அருண்ராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் அருண்ராஜா காமராஜரின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அத்தோடு சிந்துஜாவுக்கு பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: