• Apr 19 2024

முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஷாருகானின் மகன்- என்ன படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருகான்.இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.


இது ஒரு புறம் இருக்க பொதுவாக பிரபல்யமான நடிகர்களின் பிள்ளைகள் திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி வருவது அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.

அதன்படி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அறிமுகமாக இருக்கிறார். அவரது முதல் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.இதனை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவன ரெட் சில்லி டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement