பல நூறு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள நடிகர் ராம் சரண்.. எவ்வளவு தெரியுமா..?

154

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மாவீரன் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் ராம் சரண்.

மேலும் இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.

அத்தோடு தற்போது, ராம் சரண் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர், ஆச்சார்யா, ஆர்.சி 15 என மூன்று படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சமீபகாலாமாக முன்னணி திரை பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ.1338 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்த பலரும், என்னது இவ்வளவு கோடி சொத்து சேர்த்துள்ளாரா ராம் சரண் என அதிர்ச்சியில் உள்ளனராம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: