• Jun 04 2023

ஆந்திர முன்னாள் முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் - பின்னணி என்ன?

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின்றன.

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் என்டிஆர். மேலும் அவரின் நூறாவது ஆண்டு விழா இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஏராளமான திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். எனினும் இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்த ரஜினிகாந்த்துக்கு, என் டி ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா உற்சாக வரவேற்பு அளித்தார்.

என் டி ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தும் சந்திரபாபு நாயுடுவும் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் படுவைரலாகி வருகின்றன. அத்தோடு அவர்களது சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்ததாக சொல்லப்படுகின்றது. சந்திரபாபு சந்திக்க வரும்போது எந்த வித பாதுகாப்பும் இன்றி நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக வந்தது காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisement

Advertisement

Advertisement