• Apr 23 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி....

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் சினிமா உலகில் மாபெரும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவர் அரசியல் பக்கம் போகாமல் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்கள் இவரின் உற்ற நண்பர் ஆவார்.


மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவார், நடிகர் உதயநிதியின் தந்தையும் ஆவார். இவர் மாபெரும் பெருமைக்குரிய முதல்வர் எனப்படுகிறார். இவர் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


இவரின் பிறந்தநாளுக்கு பலரும் நேரிலும், இணையத்திலும் வாழ்த்து கூறி வருகின்றனர். இவர் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை இட்டுள்ளார். 


அவர் அந்த வீடியோவில் " என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் மன நின்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவருடைய 70ஆவது பிறந்த தினத்தில் வாழ்த்துகிறேன்" என்று கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement