எனது மனைவி ரோஜாவை நடிகர் பிரசாந்த் காதலித்தார்- இயக்குநர் ஆர் கே செல்வமணியின் வெளிப்படையான பேச்சு

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. மேலும் இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் இவரது முதல் படம் செம்பருத்தி ஆகும் .

மேலும் இப் படம் செம கிட் ஆனதால் அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்தது. அது மட்டும் அன்றி இவர் நடிகையாக இருந்த காரணத்தால் இவருக்கு அரசியலில் ஜொலிக்க முடிந்தது. இவர் ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்.

அத்தோடு இவர் செம்பருத்தி திரைப்பட ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்துள்ளதோடு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் அண்மையில் நடிகர் பிரசாந்தின் பிறந்தநாள் விழா நடந்துள்ளது. அதற்கு ரோஜாவின் கணவரான செல்வமணி சென்றிருப்பதோடு தனது மனைவியை பிரசாந்த் காதலித்தார் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதாவது செம்பருத்தி திரைப்படத்தில் நடிக்கும் போது பிரசாந்த் உண்மையாகவே காதலித்தார் என கூறியதோடு பிரசாந்த் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என தனது ஆசையைத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வெளிப்படையான பேச்சை பார்த்த ரசிகர்கள தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்