• May 29 2023

மீனாவின் இவ்வளவு பெரிய ரசிகனா நடிகர் பிரசன்னா....அவருக்காக இப்படியெல்லாம் பண்ணியிருக்காரா?

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகை மீனாவுக்காக தான் செய்த செயல் குறித்து பிரசன்னா மனம் திறந்து பேசியிருக்கிறார்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக கருதப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த எஜமான், முத்து, வீரா போன்ற படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதிலும் முத்து படத்தில் மீனாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ரீல் ஜோடியாக 90களில் வலம் வந்தனர் .

ரஜினி, கமல் ஹாசனுடன் இணைந்து எப்படி நடித்தாரோ அதேபோல் அஜித் - விஜய் தலைமுறையில் அஜித்துடன் வில்லன், ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்தில்கூட ஜோடி சேரவில்லை. ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சுருக்கேன் பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அவர் நடிக்காவிட்டாலும் விஜய்யுடன் மீனாவின் மகள் நைனிகா தெறி படத்தில் நடித்துவிட்டார்.

வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீனா அண்மையில் தனது கணவரை இழந்தார். இதனால் சில காலம் அமைதியாக இருந்த அவரை மற்றவர்கள் தேற்றினர். இதன் காரணமாக இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறார் மீனா. அந்தவகையில் அவருக்கு சமீபத்தில் தனியார் ஊடகம் சார்பாக மீனா 40 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரைத்துறையில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவு பெற்றதால் அவருக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது.

 இந்த விழாவில் ரஜினி, பிரபுதேவா, பிரசன்னா, பாக்யராஜ், ராஜ்கிரண், ராதிகா, ரோஜா, சினேகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரசன்னா, "நான் மீனாவுக்கு மிகப்பெரிய ரசிகன். அவருடன் ரஜினிகாந்த் தவிர்த்து வேறு யார் நடித்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவ்வளவு பொசசிவ் எனக்கு. எஜமான் படம் வெளியானபோது சென்னையில் டிக்கெட் கிடைக்காததால் ரயிலில் வித் அவுட்டில் பயணம் செய்து கரூருக்கு சென்று பார்த்தேன். அவர் மேல் பைத்தியகாரத்தனமான அன்பு" என்றார்.


 அவரைத் தொடர்ந்து சினேகா பேசுகையில், "சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே மீனா எங்கள் குடும்ப நண்பராக இருந்தார். எனது முதல் படமான விரும்புகிறேன் படத்தின்போது எனக்கு மேக்கப் குறித்த சில விஷயங்களை அவர்தான் சொன்னார். அன்று முதல் இன்றுவரை அதே அடக்கம், அமைதி அவரிடம் இருக்கிறது. ஒரு நான்கு வயது வெகுளித்தனமான குழந்தை அவரது மனதுக்குள் இருக்கிறார்" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement