• Apr 25 2024

தளபதி 66 இல் இணைந்த நடிகர் பிரபு தேவா- படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியாகிய புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய். இவர் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். அத்தோடு இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமன் இசையில் விஜய் முதல் முறையாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்களை இசையமைத்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடலுக்கு, நடன இயக்குநராக பிரபு தேவா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

போக்கிரி, வில்லு படத்தை தொடர்ந்து தளபதி 66ல் விஜய்யுடன் பிரபு தேவா இணைந்துள்ளார் என்று ரசிகர்கள் ஆனந்தமடைந்தனர்.இந்நிலையில், தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து பிரபு தேவாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement