விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாகசைத்தன்யா- செம குஷியில் சமந்தா

9884

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் இவர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தனது பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். இதனை தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்றெல்லாம் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நாகர்ஜூனாவுக்கு, உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா என பதிவிட்டிருந்தார்.ஆனால், தனக்கு வாழ்த்து சொன்ன பலருக்கும் நன்றி தெரிவித்த நாகார்ஜுன் சமந்தாவுக்கு பதிலளிக்கவில்லை. இதனால், சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து வதந்தி மேலும் உறுதியானது.

இந்நிலையில் நேற்றைய தினம் நாக சைதன்யா நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தியேட்டரில் உங்களை சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி என நாக சைதன்யா ட்விட்டரில் ட்ரெய்லரை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை ரிட்வீட் செய்த சமந்தா, ‘வின்னர்! மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்’ என்று சாய் பல்லவியை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நாக சைதன்யாவும் சமந்தாவின் ட்வீட்டை குறிப்பிட்டு ‘நன்றி சாம்’ என பதிலளித்துள்ளார். இதனால் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து எல்லாமே வதந்திதான் என முடிவுக்கு வந்துள்ளது எனக் குறிப்பிடலாம்.