• Mar 27 2023

கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் நடிகர் மன்சூர் அலிகான்- வைரலாகும் வீடியோ - பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கொடூர வில்லன், முரட்டு கதாபாத்திரம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது கண்டிப்பாக நடிகர் மன்சூர் அலிகானாகத்தான் இருக்கும்.  பார்ப்பதற்கும் முரட்டுத் தனமாக இருக்கும் மன்சூர் அலிகான் உள்ளம் மிக மென்மையானது.

பெரும்பாலும் பொது மக்கள் மற்றும் சமுதாய சிந்தனைகள்தான் அவர் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அநியாயம் என்று தன் மனதில் பட்டால் உடனடியாக போராட்டக் களத்தில் இறங்கிவிடுவார் . இதனால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.


மேலும் தற்பொழுது காமெடி வேடங்களில் படவாய்ப்பினைப் பெற்ற நடித்து வருகின்றார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவர் கடுமையாக ஓர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement