• Apr 23 2024

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை தான் கிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராகவும் இருந்து வருகின்றார்.

1956ஆம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.‘கந்தசாமி’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார் 


 கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள பழம் பெரும் நடிகரான இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.இதனால் இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement