• Apr 18 2024

நாடாளுமன்றில் நடிகர் மாதவனுக்கு கிடைத்த கௌரவம்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..வெளியான புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை தன்னுடைய அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் கட்டிப் போட்டிருக்கும் ஒருவரே நடிகர் மாதவன். இவர் நடிகனாக மட்டுமன்றி பல பெண்களின் கனவு நாயகனாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை வலம் வருகின்றார். இந்த நிலையில் நடிகராக இருந்த மாதவன் இயக்குநராக தற்போது புது அவதாரம் எடுத்திருக்கின்றார்.

அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' என்ற பிரமாண்டமான படத்தை மாதவன் இயக்கியுள்ளார். இவரின் முதல் இயக்கமான இந்தப் படம் வெளியாகிய நாள் முதல் இன்றுவரை ஏராளமான பாராட்டுக்களையும், சிறந்த வரவேற்பினையும் அள்ளிக் கொடுத்து வருகிறது.

கடந்த ஜூலை 1-ஆம் திகதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஓடிடியிலும் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கின்றது. மேலும் சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம் மற்றும் நுழைவுச்சீட்டு விற்பனை என்பவற்றின் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 50 கோடியை இப்படமானது வசூலாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமன்றி பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ள இந்தப் படமானது ரியல் நம்பி நாராயணனின் வழிகாட்டுதலின் படியே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஏற்கெனவே 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரையிடப்பட்டு பலரதும் பாராட்டு மழையை பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் மாதவனின் முயற்சி குறித்து வெகுவாக பாராட்டி இருந்தனர். முன் அனுபவம் ஏதும் இன்றி மாதவன் உருவாக்கியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது யாருமே எதிர்பார்க்காத வண்ணம் மேலும் ஒரு மைல்கல்லை எட்டி உள்ளது.

அதாவது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக மாதவனின் 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஒரு படத்தை திரையிடுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இந்த நிலையில் 'ராக்கெட்ரி' அந்த அற்புதமான வாய்ப்பை பெற்றிருக்கின்றது.

அங்கு திரையிடப்பட்ட இந்த படத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் அவருடன் இணைந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இது குறித்தான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாது ஜேபி நட்டா தனது சமூக வலைதளத்திலும் அப்புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இடம்பெற்ற பேட்டியில் மாதவன் பேசுகையில் "நாடாளுமன்றத்தில் எனது திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது குறித்து நான் பெருமையாக உணர்கிறேன். அதே நேரத்தில் எனக்கு சிறு பதற்றமும் இருந்தது. நாடாளுமன்றத்தில் ஒரு படத்தை திரையிடுவது அவ்வளவு எளிதல்ல. என்னால் இங்கு நடப்பதை நம்ப முடியவில்லை" என நெகிழ்ச்சியுடனும், மனமகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளார்.

மாதவனுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பிற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement