• Apr 23 2024

நடிகராகும் லோகேஷ் கனகராஜ்..அதுவும் யாருடன் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் மாநகரம்,கைதி, மாஸ்டர்,போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் மூன்றுமே மாபெரும் வெற்றி அடைந்தது.


அதுமட்டுமல்லாமல் கமலை வத்து விக்ரம் திரைப்படம் எடுத்து மாபெரும் சாதனை படைத்தார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக விஜய் வைத்து தளபதி 67 படத்தை இயக்கவும் உள்ளார்.


பிரமாண்ட நட்சத்திரங்களுடன் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கப்போகிறாராம்.


லோகேஷ் கனகராஜ் இதற்க்கு முன் மாஸ்டர் படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் நடித்திருப்பார். அதுவும் விஜய் கூறியதற்காக நடித்ததாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement