தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.

312

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பதும் அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் என்பது தெரிந்ததே.

மேலும் இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் இவர் வெகு சீக்கிரத்தில் குணமடைய பிரார்த்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.