• Apr 19 2024

உதயநிதியை அவசரம் அவசரமாக சந்தித்த நடிகர் கார்த்தி- ஓ இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிய திரைப்படம் தான் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி. எஸ் மித்திரன் இயக்கியிருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதில் மிரட்டும் வில்லனாக ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது. 


'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்தோடு வசூலிலும் அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு விநியோகிஸ்தர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement