புதிய கெட்டப்பில் நடிகர் கார்த்தி -வெளியானது விருமன் First Look போஸ்டர்..!

96

தமிழ் திரை உலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் இறுதியாக சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து சிறந்த விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த கொம்பன் படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

அத்தோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ளார். நடிகர் சூர்யா 2D நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்கள்.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருமன் படத்தின் First Look-யை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த கெட்டப்பை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: