• Apr 20 2024

நடை உடை பாவனை எல்லாமே நடிகர் கமல்ஹாசன் போலவே இருக்கும் நபர்-தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து நிலைத்து நிற்கும் நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். குழந்தைப் பருவத்திலிருந்து நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இது தவிர இப்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் அச்சு அசல் கமல் போலவே இருக்கும் நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடை உடை பாவனை எல்லாமே கமல் போலவே அந்த நபருக்கு இருக்கிறது.கமல்ஹாசனின் குரலும் அவரிடம் அப்படியே இருக்கிறது. நான் மிமிக்ரி செய்யவில்லை, நிஜ குரல் தான் என அந்த நபர் கூறி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement