• Apr 20 2024

நடிகர் காளிதாஸிற்கு சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்த அவரது தங்கை- வாஃவ் கியூட்டான கலெக்ஷ்னாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் ஜெயராம். இவர் இறுதியாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இவருடைய மகனான காளிதாஸ் அவர்களும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வரும் இவர் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமாகியிருக்கிறார். சில வெப் தொடர்களில் நடித்துள்ளார், அதன்மூலம் நிறைய மக்களிடமும் ரீச் ஆகியுள்ளார்.


தனது 7 வயதில் எண்டே வீடு அப்புவிடேயும் திரைப்படத்திற்காக தேசிய விருது எல்லாம் வாங்கியுள்ளார்.மேலும் இறுதியாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிந்த விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார்.


இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16ம் தேதி இவரது பிறந்தநாள் வந்துள்ளது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற காளிதாஸ் தங்கை மாளவிகா சிறுவயது புகைப்படங்களை ஷேர் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் காளிதாஸ் சிறுவயதில் செம கியூட்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement