• Apr 20 2024

மகனைத் தொடர்ந்து மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்யவுள்ள நடிகர் ஜெயராம்- யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஜெயராம். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் முறைமாமன், கோகுலம், தெனாலி, பஞ்ச தந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது இயக்குநர் மணிரத்னத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அத்தோடு இவரது மனைவி பார்வதியும் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். அதே போல இவரின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ஒரு பக்க கதை என சில படங்களே நடித்திருக்கிறார், ஆனால் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவும் சினிமாவிற்கு வருவதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் மாளவிகா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement