• Dec 07 2022

மனைவியைப் பிரிந்தாலும் புதிய காதலிக்காக 100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கிய நடிகர் ஹிருத்திக் ரோஷன்

Listen News!
stella / 2 weeks ago
image
Listen News!


ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான்  ஹிருத்திக் ரோஷன்.இவர் தூம், க்ரிஷ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழிலும் பிரபல்யமானார்.இதனால்  இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக ஹிருத்திக் இருக்கிறார்.

48 வயதாகும் இவர் ஃபேஷன் டிசைனரான சூசன்னை காதலித்து கடந்த 2000-ல் திருமணம் முடித்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ல் மனைவியைப் பிரிந்தார்.


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி நடிகை சபா ஆசாத்தை ஹிருத்திக் ரோஷன் டேட்டிங் செய்து வருகிறார்.இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் காதலி சபா ஆசாத்திற்காக ரூ.100 மதிப்புள்ள 3 மாடி வீட்டை ஹிருத்திக் வாங்கியுள்ளார்.இருவரும் புதிய வீட்டில் குடிபெயரப் போவதாக ஹிந்தி திரையுலகில் பேசப்படுகிறது வருகிறதைக் காணலாம்.