• Apr 18 2024

நாளை நடிகர் ஹரிஸ் கல்யாணின் திருமணமாம்- அடடே எந்த இடத்தில் நடைபெறவுள்ளது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட்ட ராஜா போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.


இந்த நிலையில் அண்மையில் தனக்க நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை உத்தியோாக பூர்வமாக வெளியிட்டிருந்தார். அத்தோடு இன்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னுடைய திருமணம் காதல் திருமணம் இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்  இவர்களது திருமணம் நாளை அக்டோபர் 28ம் தேதி சென்னையில் திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.இதனால் இவரது திரமண புகைப்படங்களை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement