• Oct 09 2024

நடிகர் கவினின் திருமண தேதி அறிவிச்சாச்சு- அதுவும் எப்போது தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

திறமை, உழைப்பு, நம்பிக்கையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக நிறைய பேரை கூறலாம். அந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பவர் தான் நடிகர் கவின்.2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன கேடக்டரில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார். இதனால் இவருக்கு படவாய்ப்பும் குவிய ஆரம்பித்தது.


அதன்படி லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அதிலும் டாடா திரைப்படம் தற்போதைய இளைய சமுதாயத்தைக் கவரக்கூடியதாக இருந்ததாக பலரும் தமது பாராட்டைத் தெரிவித்திருந்தனர்.அதிலும் தனுஷ், கார்த்தி என பல பிரபலங்கள் படம் குறித்து பாராட்டியிருந்தனர்

இதனை அடுத்து கவின் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. டாடா மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்ட கவின் அடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறாராம். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை என ஏற்கெனவே தகவல் வந்தது.


இந்த நிலையில் தற்போது கவின் திருமணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கவின் தனது வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement