மீண்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் உடன் கூட்டணி அமைக்கும் நடிகர் தனுஷ்- அப்போ படம் செம ஹிட்டு தான்

3338

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூல் சாதனை படைத்து வருவதும் தெரிந்ததே. மேலும் இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தேசிய விருது பெற்று வருவதும் முக்கியமாகும்.

மேலும் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஞகமே தந்திரம் திரைப்படம் கூட கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் முக்கியமாகும். அத்தோடு இவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சில படங்களின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் குறிப்பிடத்தக்கதாகும்

அத்தோடு இதையடுத்து அடுத்த மாதம் அவர் கதை எழுதி இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் வேங்கை படத்துக்குப் பின்னர் பிரகாஷ்ராஜ் தனுஷ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.