நடிகர் தனுஷிடம் மட்டும் இத்தனை சொகு சுகார்களா..? சொக்கிப்போன ரசிகர்கள்..!

டாப் டென் நாயகர்களில் ஒருவரான தனுஷ் கடந்த மாதம் வெளியான ஹாலிவுட் படம் மூலம் உலக நாயகனாகி விட்டார்.

இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என மாஸ் காட்டி வரும் தனுஷ். தமிழ், இந்தி, ஆங்கிலம் என 44 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

அதிக வருமானம் ஈட்டும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் பல சொகுசு காரர்களை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரிடம் உள்ள சொகுசுந்து குறித்து இங்கு பார்க்கலாம்…

தனுஷிடம் விலையுயர்ந்த ஜாக்குவார் கார் உள்ளது. இதன் விலை ரூ.45 லட்சம் மற்றும் இது ஒரு சொகுசு செடான் வகையை சார்ந்தது. மேலும் இந்த கார் 180PS பவர் மற்றும் 430 Nm பீக் டார்க் கொண்ட மாறுபட்ட தோற்றத்தை கொண்டது.

ஜெர்மன் ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் செடான் கார் தனுஷிடம் உள்ளது.மேலும் இந்த காரின் விலை சுமார் 1.60 கோடி என சொல்லப்படுகிறது. தனது சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு செல்ல இந்த காரை பயன்படுத்துகிறார் தனுஷ்.

தனுஷிடம் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் ராய்ஸ் உள்ளது.அத்தோடு 6750சிசி வி12 இன்ஜின் பெட்ரோல் கார் வைத்திருக்கிறார்.மேலும் இந்த கார் ஆடம்பரமான அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தனது கார் கலெக்சனில் பெட்ரோல் வகையை வைத்திருக்கிறார்.

அத்தோடு 2016 இல் தயாரிக்கப்பட்ட முஸ்டாங் கார் தனுஷிடம் உள்ளது. ரூ.75 லட்சம் விலை கொண்ட இந்த கார் வி8-இயங்கும் திறன் கொண்டது. முஸ்டாங்கின் 6 வது தலைமுறையான இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தில் செல்லும்.

இந்தியாவின் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வைத்திருக்கும் தனித்துவமான பென்ட்லி காரை தனுஷ் வைத்துள்ளார். மேலும் இதன் விலை 3.40 கோடி ரூபாய் மற்றும் கார் தானியங்கி டிரான்ஸ்மிஷன் உடன் 5950cc w12 என்ஜினுடன் வருகிறது. கிறிஸ்டல் கருப்பு நிற கார் அதன் பாதுகாப்பு மற்றும் அதிகபட்ச வசதியாலும் மிகவும் பிரபலமானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்