• Apr 01 2023

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் பாலா கவலைக்கிடம்.. மருத்துவமனைக்கு விரையும் பிரபலங்கள்.. சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற ஒரு நடிகர் தான் பாலா. இவர் பிரபல இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் தமிழில் 2003 இல் வெளியான 'அன்பு' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.


இதனைத் தொடர்ந்து 'காதல் கிசு கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களில் இவரின் நடிப்பு இன்றும் நம்மால் மறக்க முடியாது.

இந்நிலையில், நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டிருந்தது. 


இதனால் பாலாவின் நண்பர்களான மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் உள்ளிட்ட பலரும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். 


இந்நிலையில் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த வண்ணமே தான் இருக்கின்றனர். ஆனாலும் பாலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இயக்குநர் சிறுத்தை சிவா பாலாவை காண மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement