பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த நடிகராகவலம் வருபவர் தான் அமிதாப் பச்சன். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது வயது மூப்பு காரணமாக சில விளம்பரங்களில் மாத்திரமே நடித்து வருகின்றார்.
அந்த வகையில் அமிதாப் பச்சன் சமீபத்தில் தொலைகாட்சி படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார் அப்போது அவரது காலில் திடீரென இரும்பு பட்டதால் ரத்தம் வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அமிதாப்பச்சனை மருத்துவமனையில் அனுமதித்தனர்
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் இதனை அடுத்து அவர் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருவதையும் காணலாம்.
Listen News!