ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி சீரியல் குழு செய்த அதிரடி மாற்றம்…யாருமே எதிர்பார்க்கலையாம்..!

4705

செம ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா-ராணி.இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பேராதரவு கிடைத்திருந்தது. அத்தோடு இதில் கதாநாயகனாக சஞ்சீவ்வும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்திருந்தனர்.

மேலும் இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்ள்.இவர்கள் இருவருக்கும் 2020 மார்ச் மாதம் அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

ஆல்யா மானாசா ராஜா ராணி சீசன்2 இல் நடித்து கொண்டிருந்த நிலையில் சஞ்சீவும் சன்டிவியல் ஒளிபரப்பாகுகின்ற கயல் நாடகத்தில் சைத்திராவிற்கு ஜோடியாக நடிக்கின்றார்.

இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆல்யா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சமூகவலைத்தளத்தில் மீடியாவில் சஞ்சீவ் தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆல்யாவும் ஆம் என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் சஞ்சீவ்– ஆலியா தம்பதிகள் தங்களுடைய யூடியூப் சேனலில் அய்லா அக்காவாகிட்டா என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்கள்.

மேலும் அதில் அவர்கள் கூறியது, சஞ்சீவ் சொல்லும்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். தற்போது நான்கரை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், இந்த விஷயம் எங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைசாக தான் இருந்தது.

இதைப்பற்றி ராஜா ராணி டீமிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் சேனல் தரப்பில் பேசிவிட்டு சீரியல் இருந்து ஆல்யாவை நீக்காமல் அதற்கேற்றாற்போல் கதையை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை கேட்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது என்று ஆல்யா தெரிவித்துஇருக்கிறார்.