• Apr 25 2024

அவரைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி முக்கியமில்லை- அஜித் குறித்து ஓபனாகப் பேசிய எச். வினோத்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் நிறைவுற்றது.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வினோத்திடம் அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு தீர்க்கதரிசி என்று கூறியுள்ளார்.


மேலும் ஒருவர் தவறு செய்தால் அந்த தவறை மட்டும் சுட்டிக்காட்டுங்கள் என்றும் ஒட்டுமொத்த சினிமா தொழிலையே குற்றம் சொல்லாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி பேசுவது பிடிக்காது என்றும் அவரைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி முக்கியமில்லை என்றும் படக்குழுவினர் நேர்மையான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்

வெற்றி வரும் போகும் ஆனால் மனிதர்களை இழிவாக பேசக்கூடாது என்பதே அஜித்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement