• Sep 21 2023

ஆத்தாடி...ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.அனிருத் இசையமைப்பில் வெளியான பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது

அதுவும் காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கூறவே வேண்டாம், எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்காக ரூ. 3 கோடி வரை தமன்னா சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement