• Sep 21 2023

போலீசிடம் வசமாக சிக்கிய சூர்யா... அழுவது போல் நடிக்கும் மகா... உண்மையை ஒத்துக் கொண்ட கணவன்.. அட்டகாசமான 'Aaha Kalyanam' serial promo..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கின்றார். 


இவ்வாறு வசதியான இடத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதால் மாப்பிள்ளை வீட்டில் அந்தப் பெண் என்னெனன்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் சூர்யாவைப் பார்ப்பதற்காக மகா ஆபீஸிற்கு செல்கின்றார். அதில் காவலர் மகாவை மறித்து உள்ளே போக விடாமல் தடுக்கின்றார். அதற்கு மகா சூர்யா தன்னுடைய கணவர் எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் வாயிற் காவலர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பின்னர் அங்கு வந்த சூர்யா "யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்துப் பேசுங்க" எனக் கூறி வாயிற் காவலரை திட்டுகின்றார்.

மறுபுறம் பூக்காரி ஒருவர் வந்து பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுக்குமாறு கூறுகின்றார். அதற்கு சூர்யா இவங்க என் மனைவி இல்லை எனக் கூறி மகாவை இழுத்துச் செல்கின்றார். இதனைப் பார்த்த போலீஸ்அங்கு வந்து "எதற்கு இந்தப் பொண்ணோட கையைப் பிடித்து இழுத்தாய்" எனக் கேட்கின்றார்.


அதற்கு சூர்யா "இவங்க என் மனைவி" எனக் கூறுகின்றார். பதிலுக்கு போலீஸ் இவங்க உன் மனைவி தான் என்று அந்தப் பெண்ணையே சொல்ல சொல்லு எனக் கேட்கின்றார். இதனையடுத்து மகா அழுவது போல் நடிக்கின்றார். இதனைப் பார்த்த பூக்காரி அங்கு வந்து இவங்க இவரோட மனைவி இல்லை எனக் கூறுகின்றார்.


பின்னர் சூர்யா மகாவிடம் நீ என் மனைவி தான் என்று போலீசிடம் சொல்லு எனக் கூறுகின்றார். அதற்கு மகா சாரி கேளு எனக் கூறுகின்றார். சூர்யாவும் வேறு வழியின்றி மகாவிடம் மன்னிப்புக் கேட்கின்றார்.

  

Advertisement

Advertisement

Advertisement