• Sep 30 2023

பல பெண்களுடன் தொடர்பு.. சவால் விட்ட கௌதம்... மகா எடுத்த அதிரடி முடிவு... சூர்யாவிற்கு தெரியப்போகும் உண்மை..? பரபரப்பான 'Aaha Kalyanam' promo video..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வதால் அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள் என்ன என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. 


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கௌதம் மகாவிடம் "ஒரு சின்ன ஆதாரத்தைக் கூட உன்னால் கலெக்ட் பண்ண முடியாதுன்னு எனக்குத் தெரியும்" என சவால் விடுகின்றார். 


பதிலுக்கு மகா "அப்பிடியா..? ரம்யா, ராகவி, பமீலா, ஸ்வேதா இவங்க எல்லாரையும் ஒட்டுமொத்தமாக இங்க கூட்டிற்று வந்து நிறுத்தினால் நிச்சயதார்த்தம் என்ன ஆகும்ன்னு கொஞ்சம் யோசி" எனக் கூறிவிட்டு செல்கின்றார். கௌதம் தடுத்தும் நிற்காமல் செல்கின்றார்.


மறுபுறம் சூர்யாவிடம் மகா "கௌதமோட நிஜ முகத்தை நான் உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேன்" என சவால் விடுகின்றார். பின்னர் விஜய்யிடம் ஒரு லெட்டரைக் கொடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுக்க சொல்கின்றார்.


இதையடுத்து ஒரு பெண்ணிடம் போன் பண்ணிப் பேசுகின்றார் மகா. அதற்கு அந்தப் பெண் நேரில் போனால் தான் எல்லாம் நடக்கும் என்கிறார். உடனே மகாவும் கௌதமின் சுய ரூபத்தை வெளிப்படுத்த ஆதாரத்தை தேடி அவசர அவசரமாக புறப்பட்டுச் செல்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement