• Sep 13 2024

விபத்தில் சிக்கிய 'முத்தழகு' சீரியல் வைஷாலி... மயிரிழையில் உயிர் பிழைப்பு.. காயங்களுடன் அவரே வெளியிட்ட வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் முத்தழகு. இதில் முக்கிய கதாபாத்திரமான அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா.


இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் ஒரு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். 


இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும் பெற்றார். இந்த சீரியல்களைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வரும் வைஷாலி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தான் விபத்திற்குள்ளானதாக குறிப்பிட்டு காயங்களுடன் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார். 


அதில் அவர் கூறுகையில். தான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வளைவுகளில் கவனிக்காமல் தன்னுடைய ஓட்டுநர் காரை செலுத்தியதால் சிறிய விபத்து நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

மேலும் அப்போது தான் சீட்டு பெல்ட் போட்டு இருந்தமையினால் உயிர் பிழைத்ததாகவும், சீட்டு பெல்ட் மட்டும் போடலைன்னா இது பெரிய விபத்தாக மாறியிருக்கும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏர்பேக் இரண்டும் தான் என்னுடைய உயிரை காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த வீடியோவில் வைஷாலி காயங்களுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement