• Apr 24 2024

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் - அஜித்துக்கு இடையே கடும் போட்டி- அடடே இத்தனை கோடி வசூலித்து விட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சு தான் அதிகளவில் இருந்துள்ளது. ரிலீசுக்கு பின்னும் அந்த இருபடங்களைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. 

தற்போது வசூலில் யார் நம்பர் 1 என்கிற போட்டியும் ஒருபக்கம் நிலவி வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய்யும், அஜித்தும் தங்களது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டனர்.


இந்நிலையில், முதல் வாரத்தில் தமிழகத்தில் பின்தங்கி இருந்த வாரிசு தற்போது துணிவுக்கு நிகரான வசூலை எட்டியுள்ளது.துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இரு திரைப்படங்களும் தமிழகத்தில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகின்றது.


இப்படங்களைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். அதே போல அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement