• Apr 01 2023

படத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து...தன்னந்தனியாக நின்ற நடிகை...இறுதியில் யார் காப்பாற்றியது?

ammu / 1 month ago

Advertisement

Listen News!

சங்கர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டில் வெளியான ‘காதலன்’ திரைப்படதில் பிரபுதேவா மற்றும் நக்மா லீடு ரோலில் நடிக்க ரகுவரன், வடிவேலு, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 


காதலன் திரைப்படம் ரொமான்ஸ் கலந்த காதல் படமாக திரில்லர் சப்ஜெக்ட்டுடன் வெளிவந்த படமாக விளங்கியது. படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை கூடுதல் சிறப்பு. இதில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் இன்று வரை பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.


ஊர்வசி பாடலாகட்டும், முக்காப்லா பாடலாகட்டும் அனைத்துப் பாடல்களும் இளசுகளை உற்சாகப்படுத்தும் பாடலாகவே அமைந்து விளங்குகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட தீவிபத்து பற்றி அப்போது உதவிய இயக்குநரும் இன்றைய இயக்குநருமான வசந்தபாலன் ஒரு பேட்டியில் கூறினார்.


ஒரு பட்டாசு லாரியில் நக்மா பிரபுதேவா பொள்ளாச்சியில் இருந்து போவது மாதிரியான சீன். பின் பட்டாசுகளை போட்டு பட்டாசுகளை வெடித்து வருவார்கள். அப்போது அந்த பட்டாசு தவறுதலாக லாரியில் பட்டுவிட்டதாம். உடனே லாரியில் இருந்த அனைத்து பட்டாசுகளும் பற்ற ஆரம்பித்து விட்டதாம்.


கூட இருந்த பிரபுதேவா குதித்து ஓடி விட்டாராம். நக்மா மட்டும் இருக்கிறாராம். அவர் கூட உதவி இயக்குநர் வசந்த பாலனும் இருக்கிறாராம். அப்போது வசந்தபாலன் நக்மாவை தூக்கி கீழே தள்ளிவிட்டாராம். மிகவும் பத்திரமாக நக்மாவை காப்பாற்றினாராம். தன்னை காப்பாற்றியதற்காக வசந்தபாலனுக்கும் அவருடைய உதவியாளர்களுக்கும் சர்ட்டுகள் வாங்கிக் கொடுத்தாராம் நக்மா என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement