• Apr 24 2024

கண் பார்வையற்றவர்களுக்காக திரையில் துணிவு பட ஸ்பெஷல் ஷோ... வைரலாகும் புகைப்படங்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் சமுத்திரக்கனி, மோகனசுந்தரம், ஜான் கொகேன், தர்ஷன், பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

துணிவு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி, பட்டித்தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் இப்படம் திரையரங்கிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்துள்ளனர். இவர்களுக்காக சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து திரையிட்டு இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.

சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அனைவரும் அஜித் படத்தை ரசித்து பார்த்துள்ளனர். இந்த சிறப்பு காட்சி திரையிடலின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. துணிவு படக்குழுவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement