• Apr 19 2024

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் வழங்கவுள்ள சிறப்புப் பரிசு- அடடே சூப்பர் தகவலாச்சே

stella / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் நடிகர் மனோபாலாவின் மறைவு செய்தி அறிந்ததுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று மனோபாலாவின் உடலுக்கு மாலை அணிவித்தார்.

அண்மையில் வெளியாகிய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் சதம் அடித்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினியின் வரலாற்று சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார் அந்த மாணவி. பல பிரபலங்களும் அந்த மாணவியை பாராட்டியும் வாழ்த்தியும் வரும் நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் அந்த மாணவியை வாழ்த்தி உள்ளனர்.

இதனை அடுத்து இந்த தேர்வில் அதிக மதிப் பெண்களைப் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக தேர்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்க நடிகர் விஜய் திட்டம் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement